நடிகை லட்சுமி மேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்!!!

Tuesday,21st of May 2013
சென்னை::நடிகை லட்சுமிமேனன் தனது 17வது பிறந்த நாளை சென்னையில் நேற்று முன்தினம் கொண்டாடி மகிழ்ந்தார்.
 
சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது. அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியான கும்கியும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்தது இரண்டு பெரிய வெற்றிப் படங்களை கொடுத்ததால் லட்சுமி மேனனை தேடி வாய்ப்புகள் வருவதோ ஏராளம். ஆனால் அவர் தற்போது மஞ்சப் பை, சிப்பி, குட்டிப்புலி, பாண்டியநாடு உள்பட 5 புதுப்படங்களில் நடித்து வருகிறார்.
 
லட்சுமிமேனன் நேற்று முன்தினம் தனது 17வது பிறந்த நாளை சென்னையில் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். பாட்டியுடன் ஷாப்பிங் சென்ற அவர் தங்க செயின் வாங்கியதை மறக்க முடியாத பிறந்த நாளாக கருதுகிறார்.

Comments