Monday,20th of May 2013
சென்னை::நான் விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை, என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், ஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய 7 மொழிகளில், இதுவரை 45 படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அவருடைய 46வது படம், பவித்ரா. தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ரேயா, விபச்சார அழகியாக நடித்து இருக்கிறார். டைரக்டர் ஜனார்த்தன் மகரிஷி இயக்கியுள்ள இப்படம் பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்பதால், படத்துக்கு தணிக்கை குழுவினர், ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
விபச்சார அழகியாக நடித்திருப்பது குறித்து ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில், நான் நடித்துள்ள சிறந்த படங்களில் பவித்ராவும் ஒன்று. யதார்த்தமான கதை. விபச்சார அழகியாக நடிப்பதற்கு நான் வெட்கப்படவில்லை. பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்றாலும், இந்த படத்தில் ஆபாசம் துளி கூட இல்லை. குறிப்பாக, படுக்கை அறை காட்சிகள் இல்லை. படத்தின் கதைப்படி, நான் விபசார அழகியாக இருந்து அரசியல் தலைவர் ஆகிவிடுவேன். ஏழை – எளிய, ஆதரவற்ற பெண்களை கயவர்களிடம் இருந்து பாதுகாத்து, அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது போன்ற வேடம் அது, என்று கூறியுள்ளார்.

Comments
Post a Comment