Thursday,23rd of May 2013
சென்னை::அடிக்குது குளிரு…துடிக்குது தளிரு…’ என்று ‘மன்னன்’ படத்தில் பாடிய பாடல் மூலம் பாடகராகவும் (?) ஆனவர் ரஜினிகாந்த்.
இப்போது ‘கோச்சடையான்’ படத்தின் ஹிந்தி பதிப்புக்காக ஹிந்தியிலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். தமிழிலும் இதே பாடிலை ரஜினிகாந்த்தான் பாடியுள்ளார். இவரைப் பாட வைத்துள்ளவர் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்.
தமிழ் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். ஹிந்திப் பாடலை இர்ஷத் கமில் எழுதியுள்ளார்.
ரஜினிகாந்த்தின் நம்பிக்கை, தத்துவம் ஆகியவற்றைப் பற்றிய பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.
‘கோச்சடையான்’ படத்தைப் பற்றி சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாராட்டிப் பேசியிருந்தார். இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் படமான இதில் ரஜினியின் தோற்றம் மிகவும் அசத்தலாக உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த படத்தின் இயக்குனர் சௌந்தர்யா, படத்திற்கு தூணாக ஏ.ஆர். ரகுமான் இருக்கிறார் என குறிப்பிட்டிருக்கிறார்.
Comments
Post a Comment