விஜயகாந்த் ஹீரோயின் வடிவேலு ஜோடியானார்!!!

Monday,20th of May 2013
சென்னை::சென்னை: இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் நடிகர் வடிவேலு. அவருக்கு ஜோடியாக விஜயகாந்த் அறிமுகம் செய்த மீனாட்சி தீட்சித் நடிக்கிறார். நாய் சேகர், வட்டச் செயலாளர் வண்டு முருகன், கைப்புள்ள, தீப்பொறி ஆறுமுகம் என படத்துக்கு படம் மாறுபட்ட பட்டப் பெயர்களுடன் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்து வருபவர் வடிவேலு. கடந்த 2 ஆண்டுகளாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை தவிர்த்தார்.

மதுரைக்கு சென்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்தார். தற்போது புதிய படத்தில் நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘கஜ புஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்’ என்ற நீண்ட பெயர் கொண்ட படத்தில் தெனாலிராமனாக வேடம் ஏற்கிறார். சரித்திர பின்னணியில் நகைச்சுவையுடன் இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ‘போட்டா போட்டி’ என்ற படத்தை இயக்கிய யுவராஜ் இயக்குகிறார்.

 இப்படத்துக்காக ஏவி.எம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது. 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்தார். அவருக்கு ஜோடியாக

மீனாட்சி தீக்ஷித் நடிக்கிறார். இவர் விஜயகாந்த இயக்கி நடித்த ‘விருதகிரி’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.

Comments