Tuesday,7th of May 2013
சென்னை::வெப்பம், 180 போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை நித்யா மேனன். மலையாள வரவான இவருக்கு இந்த இரண்டு படங்களுக்கு அடுத்து தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தனது தாய் மொழியான மலையாளத்திலேயே நடித்து வருகிறார்.
தற்போது அங்கு உள்ள முன்னணி நடிகைகளில் நித்யா மேனனும் ஒருவர். இப்போது ஜே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் எங்கேயும் எப்போதும் சர்வானந்த் ஜோடியாக நடித்துள்ள நித்யா மேனன் தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* தமிழில் அதிகமாக நடிப்பது இல்லையே ஏன்?
ஒரு ஆங்கில படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நான், தற்போது தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடிக்கிறேன். ஆனால், தமிழில் தான் குறைவான படங்களில் நடித்துள்ளேன். காரணம், என்னை, கவரக் கூடிய வகையிலான கதைகள், தமிழில் கிடைக்காதது தான்.
* எந்த மாதிரி கேரக்டர்களில் ஈடுபாட்டுடன் நடிக்கிறீர்கள்?
குடும்பம், சென்டிமென்ட் கதைகளில் நடிக்கும் போது என்னையும் அறியாமல், அதிக ஈடுபாடு ஏற்படும். அந்த வகையில், என் தாய் மொழியான மலையாள படங்களே, என் திறமைக்கு அதிக தீனி போட்டுள்ளன.
* படங்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
படத்தின், ஹீரோ யார்? எத்தனை ஹீரோயின் என்றெல்லாம் பார்ப்பதில்லை. எனக்கான கேரக்டரில் நடிப்பதற்கு போதிய வாய்ப்பு இருந்தால், அந்த படங்களை நான் விடுவதில்லை.
* ஒரே நேரத்தில், பல மொழிப் படங்களில் நடிப்பது சிரமமா?
கலைக்கு, மொழி ஒரு தடையே இல்லை. எந்த மொழிப்படமாக இருந்தாலும், காட்சிகளுக்கு தேவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவேன். இதில், எனக்கு எந்த சிரமமும் இதுவரை ஏற்பட்டதில்லை.
* கமர்சியல் குதிரையில் சவாரி செய்யாதது ஏன்?
என்னை கமர்சியல் நடிகையாக்கும் முயற்சியில், சில இயக்குனர்கள் இறங்கினர். நான், அதற்கு உடன் படவில்லை. அத்துடன், என் உடல் அமைப்பும், முக அமைப்பும், குடும்ப பாங்கான வேடங்களுக்கே பொருந்துகின்றன. இதனால், கிளாமராக நடிக்க விருப்பமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment