Monday,13th of May 2013
சென்னை::குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா. அந்த வகையில் பல இந்தி படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, ஒரு படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அப்போதே எதிர்காலத்தில் ஒரு படத்திலாவது அவருடன் தான் டூயட் பாட வேண்டும் என்ற ஆசையை மனதளவில் வைத்திருந்தாராம் ஹன்சிகா. ஆனால் 15 வயதில் அவர் கதாநாயகி ஆனபோது, இந்தி சினிமாவை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு கைகொடுத்தது.
அதனால், தெற்கு நோக்கி வந்த ஹன்சிகா, இப்போது தமிழில் பெரிய நடிகையாகி விட்டார். இருப்பினும், தாய்மொழியான இந்தியிலும் இதே மாதிரி முன்னணி நடிகையாக வேண்டும். ஹிருத்திக் ரோஷன் போன்ற நடிகர்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசையே அவருக்கு அளவுக்கதிகமாக உள்ளதாம். அதனால், அடுத்து இந்தி படங்களை கைப்பற்றி அதிரடியாக பிரவேசிக்கவும் தகுந்த நேரம் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் ஹன்சிகா.

Comments
Post a Comment