Wednesday,29th of May 2013
சென்னை::திருஞான சம்பந்தார் வாழ்க்கை படமாகி வருகிறது. 'திருஞான சம்பந்தார்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை பாரம்பரியம் மூவிஸ் சார்பில் பார்கவி என்கிற பழனியம்மாள் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வழக்கறிஞர் விஜய் ஆனந்த்.
இதில் புதுமுகங்கள் ஸ்டாலின், காவ்யா கிரண், ஷாம்லி நாயர், பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம் மற்றும் ஏழு புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இவர்களுடன் இயக்குநர் விஜய் ஆனந்தும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
திருஞான சம்பந்தார் எழுதிய பாடல்களின் வழியாக அவரது வாழ்க்கையை கதையாக்கி படமாக்கியுள்ள இயக்குநர் விஜய் ஆனந்த் இப்படத்தின் படப்பிடிப்புக்காக கோவையில் பிரமாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளார்.
திருஞான சம்பந்தார் எழுதிய 11 பாடல்களும், பட்டுக்கொட்டை சண்முகசுந்தரம் எழுதிய 3 பாடல்களும் என இப்படத்தில் மொத்தம் 14 நான்கு பாடல்கள் உள்ளன. கேரளா அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற வீ.தஷி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை, ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரசாந்த், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், மு.களஞ்சியம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார்கள்

Comments
Post a Comment