Tuesday,28th of May 2013
சென்னை::விஜய் மற்றும் முருகதாஸ் இணையப்போகும் புதிய படத்திற்கு அனிருத் இசைமைப்பாளராகிவிட்டார் பலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலால் மகிழ்ச்சி
யில் அனிருத்தை அழைத்து பாராட்டியுள்ளார் ரஜினி. கூடவே சில அறிவுரையும் கூறியுள்ளார்.
உன் வளர்ச்சிக்கு என்னோட ஆசிர்வாதங்கள் என்றவர், அதற்கப்புறம் சொன்னதுதான் அனிருத் கைகட்டி வாய்பொத்தி கேட்க வேண்டிய விஷயம். இப்படியே இசையிலே கவனம் செலுத்தி இன்னும் இன்னும்னு பெரிய படங்கள் செய்யணும். அவ்வளவு ஏன்? நீ என் படத்திற்கு இசையமைக்கிற நேரமும் வந்து கொண்டேயிருக்கு.
இந்த நேரத்தில் நானே ஹீரோவா நடிக்கிறேன்னு இறங்கி வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணிக்காதே. இறைவன் காட்ற ரூட்டுல சந்தோஷமா போகணும். நீயே இன்னொரு பாதையை டிசைட் பண்ணி, கிடைச்சிருக்கிறதையும் விட்ற கூடாது. யோசி என்றாராம் சுப்பர் ஸ்டார்..
அவரே சொல்லிட்ட பிறகு அப்புறம் என்ன? தனது ஹீரோ ஆசையை குழிதோண்டி புதைத்துவிட்டாராம் அனிருத்.
Comments
Post a Comment