வடிவேலுவைத் தொடர்ந்து செந்திலும்!!!

Wednesday,1st of May 2013
சென்னை::வடிவேலுவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சென்னையில் சில இடங்களில் அடுக்கு மாடி வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டார். குறிப்பாக சினிமா கம்பெனிகளுக்குத்தான் வாடகைக்கு விட்டார். ஆனால், அப்படி அவரது வீட்டில் சினிமா கம்பெனி வைத்திருந்தவர்கள் எடுத்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதனால் இப்போது அவரது வீட்டுப்பக்கமே சினிமாக்காரர்கள் செல்வதில்லை. சென்டிமென்டாக தவிர்க்கத் தொடங்கி விட்டார்கள்.

இந்த நிலையில், தற்போது காமெடி நடிகர் செந்திலும் சுமார் பத்து வீடுகள் அடங்கிய ஒரு அடுக்குமாடி பில்டிங்கை சென்னையிலுள்ள சாலிகிராமத்தில் கட்டி விட்டுள்ளார். இது முழுக்க முழுக்க சினிமாக்காரர்களுக்காகத்தானாம். முக்கிய ஹோட்டல்களுக்கு சென்று கதை விவாதம் நடத்த முடியாமல் கஷ்டப்படும் பட்ஜெட் படாதிபதிகளுக்காக இதை வாடகைக்கு விடப்போகிறாராம் செந்தில். அதோடு, மற்ற இடங்களை மாதிரி இல்லாமல் மிகக்குறைந்த வாடகைக்கே விடப்போகிறாராம். சினிமாக்காரர்களுக்காக இந்த சலுகையாம்.
 

Comments