Friday,10th of May 2013
சென்னை::நடிகர்-நடிகைகள் ஒரு லெவலுக்கு மேல் வளர்ந்து விட்டால், அதன்பிறகு அவர்கள் சொல்வதை அவர்களே கேட்க மாட்டார்கள். பிறகு எப்படி மற்றவர்கள் சொல்வதை கேட்பார்கள். இந்த விசயத்தில் காஜல்அகர்வாலும் விதிவிலக்கல்ல. படப்பிடிப்பு தளத்துக்கு வரும்போதே காதில் போனை வைத்தபடிதான் என்ட்ரி கொடுப்பார் அவர். உள்ளே நுழைந்ததும் உதவியாளர்கள் சேரை எடுத்துப்போட, யாருடனோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருப்பார் காஜல்.
ஆனால், டேக் வைக்க ரெடியாகிக்கொண்டிருக்கும் இயக்குனர்களோ, இவர் எப்போது பேசி முடிப்பது. டயலாக் பேப்பரை கொடுத்து நான் ஷாட் வைப்பது என்று நொந்து கொண்டிருப்பார்கள். இப்படி காஜலின் போன் அரட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால், ஆல் இன் ஆல் அழகுராஜா பட ஸ்பாட்டில், ஒருநாள் தனது நிலையை காஜலிடம் நேரடியாகவே சொல்லி விட்டாராம் டைரக்டர் ராஜேஷ். அதையடுத்து, தான் செய்த தவறை உணர்ந்த அவர், இனிமேல் படப்பிடிப்பு தளங்களில் அதிகமாக போன் பேசமாட்டேன் என்று உறுதி அளித்தாராம் காஜல்.

Comments
Post a Comment