கோலிவுட்டில் தாக்குபிடிக்க முடியுமா? த்ரிஷாவின் திடீர் பயம்!!!

Monday,6th of May 2013
சென்னை::மீடியாக்கள் ஒன்று திரண்டு த்ரிஷாவுக்கு எப்போதோ திருமணம் நடத்தி வைக்க ஆசைப்பட்டன. ஆனால், அவரோ ஒத்துக்கொள்வதாக இல்லை. சினிமாவில் நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்.
 
பத்து ஆண்டுகளாக சாதிக்க முடியாததையா இனிமேல் சாதித்து விடப்போகிறீர்கள் என்று கேட்டால், இதுவரை மரத்தை சுற்றி டூயட் பாடத்தான் என்னை யூஸ் பண்ணி வந்தார்கள். ஆனால், இப்போதுதான் எனக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, பூலோகம், என்றென்றும் புன்னகை, ரம் ஆகிய படங்களில் எனது இன்னொரு முகம் வெளிப்படும். அந்த அளவுக்கு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன் என்கிறார் த்ரிஷா.

இப்படி அவர் தில்லாக பேசினாலும், ஹன்சிகா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகளின் ஆதிக்கத்தினால் இதற்கடுத்து தனக்கு படம் கிடைக்குமா? என்ற பயத்தில் இருக்கிறாராம் த்ரிஷா. ஒருவேளை படமே கிடைக்கவில்லையென்றால், சினிமாவே நம்மை வெளியேற்றியது போன்ற நிலை ஏற்பட்டு விடுமோ என்றும் புலம்புகிறாராம். இந்த நிலையில், புதிய படங்களுக்கு அவர் முயற்சி எடுக்கிற இடங்களில் எல்லாம் தோல்விதான் மிஞ்சுகிறதாம். அதனால் மேலும் மூடுஅவுட்டாக்கி கிடக்கிறார் த்ரிஷா.

Comments