ஜில்லா படத்தில் ஷக்தி என்ற கதாபாத்திரத்தில் விஜய்!!!

Wednesday,8th of May 2013
சென்னை::தலைவா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விஜய் ஜில்லா படத்திற்கு தயாராகி விட்டார்.
 
அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் இந்தப் படத்தை ஆர் பி சவுத்ரி தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். விஜய் - காஜல் இரண்டாவது முறையாக ஜோடி சேரும் படம் இது. டி.இமான் இசையமைக்கிறார்.
 
தற்போது படத்தில் நிவேதா தாமஸ் என்பவர் புதியதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 17 வயதான இந்த நிவேதா மோகன்லாலுக்கு மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் நடிக்க இருக்கிறார். விஜய், மோகன்லால் என இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்க இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார் நிவேதா.
 
மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் 'ஷக்தி' என்ற பெயரில் நடிக்கிறார் விஜய். ஷக்தியின் பட்டப் பெயரான ஜில்லா என்பதையே படத்திற்கு தலைப்பாக்கி இருக்கிறார்கள். ஜில்லா படப்பிடிப்பு மே இரண்டாம் வாரத்தில் தொடங்குகிறது. படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments