Monday,27th of May 2013
சென்னை::திறமை என்பதை விட, நேரத்தை ரொம்பவே நம்புகிறார் தமன்னா. "சினிமாவில் நடிகையான போது, இந்தியில் தான் பிரபலமாக ஆசைப்பட்டேன். ஆனால், தென் மாநில சினிமா, என்னை இழுத்துக் கொண்டது. அதனால் தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையானேன். நானே, நினைத்து பார்க்காததெல்லாம் நடந்ததற்கு காரணம், என்னுடைய நேரம் தான்.
சில ஆண்டுகளுக்கு பின், இந்திக்கு சென்று நடித்தேன். நடித்த படம் வெற்றி பெறவில்லை என்ற போதும், அங்குள்ளவர்கள் என்னை சின்ன ஸ்ரீதேவி என்கின்றனர். அதைக்கேட்டு பூரித்துப் போகிறேன்.
நான் பெரிதாக ஒன்றும் நடித்துவிடவில்லை. அப்படியிருந்தும், என்னை ஸ்ரீதேவியுடன் ஒப்பிடுவதும், என்னுடைய நல்ல நேரம்தானே என்கிறார் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளிலும், கணிசமான படங்களை கைவசம் வைத்துள்ள தமன்னா, மூன்று மொழிகளிலும், நல்ல வாய்ப்புகளை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதிலும், ஆர்வமாக இருக்கிறார்.
Comments
Post a Comment