தில்லு முல்லு ரீமேக்கில் கமல் ஹாசன் கதாபாத்திரத்தில் சந்தானம்!!!

Thursday,30th of May 2013
சென்னை::1980களில் கே.பாலசந்தர் இயக்கத்தில், ரஜினியின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் தில்லு முல்லு.
இப்படம் இப்போது மீண்டும் அதே பெயரில் ரீ-மேக் செய்யப்படுகிறது. இதில் ரஜினி வேடத்தில் சென்னை 600028 சிவா நடிக்க, நாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். இப்படத்தில், தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். சவுகார் ஜானகி வேடத்தில் கோவை சரளா நடிக்கிறார். பிரபல காமெடி நடிகர் பிரமானந்தம் முக்கிய வேடமேற்றுள்ளார்.
 
எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்ஷங்கர் ராஜா இருவரும் முதன் முறையாக இணைந்து இசையமைக்கிறார்கள். வீராப்பு படத்தை இயக்கிய பத்ரி இயக்க, வேந்தர் மூவீஸ் தயாரிக்கிறது. ரஜினி நடித்த ‘தில்லு முல்லு’ படத்தின் இறுதிகாட்சியில் கமல் நடித்து இருப்பார்.
 
ஆகவே தற்போது ரீமேக்காகி இருக்கும் படத்தில் கமல் வேடத்தில் நடித்து இருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினி மாட்டிக்கொண்ட போது கமல் தனது வக்கீல் படையுடன் வந்து ரஜினியை காப்பாற்றுவார். அவ்வாறு மிர்ச்சி சிவாவை காப்பாற்றும் வேடத்தில் சந்தானம் நடித்து இருக்கிறாராம்.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜெனிவாவில் ஜுன் 1ம் தேதி நடைபெற இருக்கிறது. படத்தை ஜுன் 14ம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். 

Comments