தனுஷை புகழும் அனில் கபூர் , சோனம்!!!

Tuesday,28th of May 2013
சென்னை::நான் எப்படி நடித்தாலும் அப்பாவுக்குப் பிடிக்கும். ஆனால் ‘ராஞ்னா’ பற்றி பேசினால், தனுசை புகழத் தொடங்கிவிடுவார். அவர் பற்றியே பேசத் தொடங்குவார். தனுஷ் சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் பின்பற்றும் ஒவ்வொரு விஷயத்திலும் அப்பாவித்தனம் தெரியும். அவரைப்போல எதிலும் ஆர்வமான, தெளிவான நபரை பார்த்ததில்லை. அவரது செயல்கள் அனைத்தும் உண்மையானவை. யதார்த்தமானவை. அதனால்தான் அவரால் ‘ராஞ்னா’வில் நடிக்க முடிந்திருக்கிறது.
 
தனுஷ், இந்தி நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் நடிக்கும் இந்தி படம், ‘ராஞ்னா’. ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். இது தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. ‘இந்தப் படம் பற்றி பேசினால், எப்போதும் தனுசை அனில் கபூர் புகழ்ந்துகொண்டிருப்பார்’ என்று சோனம் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இந்தப் படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறேன்.

Comments