சென்னை::நடிகை திரிஷா படப்பிடிப்பில் அம்மாவுக்கு தனி ரூம் கேட்டு தகராறு செய்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
‘ப்ரியம்’ பாண்டியன் இயக்கும் ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்தது. படப்பிடிப்புக்கு சென்ற திரிஷாவுடன் அவரது அம்மா உமாகிருஷ்ணனும் உடன் சென்றார். நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் திரிஷாவும் உமாகிருஷ்ணனும் தங்க படக்குழுவினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் தனது அம்மாவுக்கு தனி ரூம் ஒதுக்கும்படி கேட்டதாகவும் படக்குழுவினர் மறுத்ததால் திரிஷா ஓட்டலில் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய திரிஷாவிடம் இதுகுறித்து கேட்டபோது மறுத்தார். ஐரோப்பாவில் நடந்த என்றென்றும் புன்னகை படப்பிடிப்பில் என் அம்மாவுக்கு ரூம் கேட்டதாக தவறான செய்தி பரப்பப்பட்டு உள்ளது. அப்படி அநாகரீகமாக நான் நடந்து கொள்ளவில்லை. அத்தகைய பெண்ணும் நான் இல்லை. என்னைப்பற்றி அப்படி வந்த செய்திகள் பொய்யானவை.
ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலை தொடரில் உறை பனி சூழ்ந்த இடத்தில் படப்பிடிப்பு நடந்தது. மூன்று வாரங்கள் அங்கு இருந்தோம். அதே பகுதியில் விளம்பர படமொன்றிலும் நடித்தேன். என் பிறந்த நாளையும் அங்கேயே கொண்டாடினேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.

Comments
Post a Comment