விஜய் பாணியிலேயே காதல், காமெடி, செண்டிமென்ட், ஆக்சன் என ஜனரஞ்சகமான கதையில்: ஜில்லா, படத்துக்கு கல்லா கட்டுகிறார்கள்!!!
Friday,3rd of May 2013
சென்னை::துப்பாக்கி படத்துக்குப்பிறகு விஜய் நடித்துள்ள படம் தலைவா. இப்படத்தை விஜய் பாணியிலேயே காதல், காமெடி, செண்டிமென்ட், ஆக்சன் என ஜனரஞ்சகமான கதையில் இயக்கியுள்ளார் டைக்டர் விஜய். மும்பை, ஆஸ்திரேலியா என்று வெளியூர், வெளிநாட்டு லொகேசன்களில் பiப்பிடிப்பை முடித்து பூசணிக்காயும் உடைத்து விட்டார்களாம். அடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகள்தான் பாக்கி. அதன்பிறகுதான் பிஸ்னஸ் பேசப்போகிறார்களாம்.
ஆனால், இப்படத்தையடுத்து விஜய் நடிக்கப்போகும் ஜில்லா படத்திற்கான வியாபாரத்தை இப்போதே தொடங்கி விட்டார்களாம். படத்திற்கான பூஜையை ஆரம்பித்தபோதே இந்த வேலைகளில் இறங்கிவிட்ட ஆர்.பி.செளத்ரி, சில ஏரியா விநியோகஸ்தரிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். மொத்த படத்தையும் முடித்தபிறகே அவனவன் படத்தை விற்க முடியாமல் திணறிக்கொண்டிருக்க, ஒரு படத்தின் பூஜையை போட்ட உடனேயே வியாபாரத்தையும் தொடஙகி விட்டாரே செளத்ரி. நிஜத்தில் அவர்தான் சரியான வியாபாரி என்று பேசிக்கொள்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
Comments
Post a Comment