Tuesday,28th of May 2013
சென்னை::சாதாரண ரசிகர்கள்தான் ஹன்சிகாவிடம் ஜொள்ளுவிடுகிறார்கள் என்றால் ஜப்பான் கவர்ணர் ஒருவருர் அண்மையில் ஜொள்ளுவிட்டிருக்கிறார்.
ஹன்சிகா ரொம்ப அழகா இருக்கிறார் என இந்திய ரசிகர்கள்தான அம்மணிக்கு கோயில் கட்டும் அளவுக்கு வந்தார்கள். அதுமட்டுமல்லாது, இதுவரை ஹன்சிகாவுக்கு கடிதம் வாயிலாக மட்டுமே தொடர்பில் இருந்த சில கிராமத்து ரசிகர்கள், திடீர் திடீரென்று அவர் கலந்துகொள்ளும் படப்பிடிப்புத் தளங்களுக்கு வந்து அதிர்ச்சியளிக்கிறார்கள.
உங்களை நேருல பாக்கனும்னு வந்தோம். ஆனா இப்ப திரும்பி போக முடியல. உங்க அழகு எங்களை கட்டிப்போடுது என்றெல்லாம் அள்ளவிடுகிறார்களாம். இதனால் இப்போது கிராமத்து பார்ட்டிகளை பார்த்தால் அப்படியே எஸ் ஆகிறாராம் ஹன்ஸ்.
இந்நிலையில் அண்மையில் 'தீயா வேலை செய்யனும் குமாரு' படப்பிடிப்புக்காக ஜப்பான் சென்றுள்ளார் ஹன்சிகா. அப்போது ஜப்பான் நாட்டின்; டோயோமா மாநிலத்தைச் சேர்ந்த கவர்ணர், நான் பார்த்த நடிகைகளில் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று ஜப்பான் மொழியில் ஜொள்ளினாராம்.
நம்மளோட அழகு ஜப்பான் நாட்டைகூட அட்டாக் பண்ணியிருக்கே என்று கண்ணாடியில் தன்னைப்பார்த்து அசந்து நின்றாராம் ஹன்சிகா.
Comments
Post a Comment