இமயமலையில் சிம்பு!!!

Monday,27th of May 2013
சென்னை::சமீப காலமாக, ஆன்மீகத்தில் அதிக பற்று கொண்டு சிம்பு கோயில் கோயிலாக சுற்றி வருகிறார் என்பதை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.
கடந்த வாரம் ‘இங்க என்னா சொல்லுது’ படப்பிடிப்புக்காக வட இந்தியா சென்ற சிம்பு, அப்படியே இமயமலை அடிவாரத்திலுள்ள ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய ஆன்மீகத் தலங்களுக்கும் பயணம் செய்தார்.
 
ஆன்மீகம், தியானம் இரண்டு என்னையே எனக்கு அடையாளம் காட்டுவதாக சிம்பு சொல்லியிருந்தார்.
 
தூய்மையான காற்றின் ஊடே கலந்து வரும் ஆன்மீகம் தன்னை மேலும் மெருகேற்ற உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிம்பு, ஆன்மீகப் பயணத்தில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களுக்காக,

Comments