சென்னை::மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது நிறைய அலம்பல்கள் செய்வார்கள் நடிகர்-நடிகையர். ஆனால், ஹன்சிகா ரொம்ப மாறுபட்டவராக இருக்கிறார். ஆரம்பத்தில் எப்படி பணிவோடு நடந்து கொண்டாரோ அதே மாதிரிதான் இப்போதும் நடந்து கொள்கிறார். அதிலும் படப்பிடிப்புக்கு 7 மணி என்றால் 6.50க்கே ஆஜராகி ஆச்சர்யத்தைக் கொடுத்து வருகிறார். சின்னச்சின்ன விசயங்களுக்கெல்லாம் கேரவனுக்குள் சென்று தலைமறைவாகிக்கொள்வதும் இல்லையாம்.
இதுபற்றி ஹன்சிகாவை வைத்து தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை இயக்கியுள்ள சுந்தர்.சி கூறுகையில், இதுவரை எனது படங்களில் நடித்த நடிகைகளில் குஷ்புவுக்கு பிறகு ஒரு நல்ல நடிகை என்றால் அது ஹன்சிகாதான் என்கிறார். நடிப்புக்காக நிறையவே மெனக்கெடுகிறார். குறிப்பாக, இந்த படத்துக்காக ஜப்பான் சென்றிருந்தபோது கடுமையான குளிர் நிலவியது. ஆனால், உறைய வைக்கிற அந்த குளிரிலும் கவர்ச்சிகரமான உடையணிந்து நடித்தார். நாங்களெல்லாம் போர்த்திக்கொண்டு நிற்க, அவர் அந்த சிறிய உடையணிந்தும் எந்த நடுக்கமும் இல்லாமல் நடித்துக்கொண்டிருந்தார்.
இதற்கு காரணம், அவரது உறுதிதான். மற்றவர்களாக இருந்தால், இந்த குளிரில் எப்படி சிறிய உடைகளை அணிந்து நடிப்பது என்று தயங்குவார்கள். ஆனால், ஹன்சிகா அப்படி எதுவும் சொல்லவில்லை. எந்த தடுமாற்றம் இல்லாமல் நடித்து முடித்தார். அந்த வகையில் டைரக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் ஹன்சிகாவுக்கு நிகர் இப்போதைக்கு யாரும இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்கிறார் சுந்தர்.சி.,

Comments
Post a Comment