Tuesday,14th of May 2013
சென்னை::நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் வாரிசான விக்ரம் பிரபு, பிரபுசாலமனின் கும்கி படத்தின் மூலம் ஹீரோவாக அவதரித்தார். முதல்படமே அவருக்கு சூப்பர்

ஹிட்டாக அமைந்தது. தற்போது "எங்கேயும் எப்போதும்" சரவணன் இயக்கத்தில், "இவன் வேற மாதிரி", "தூங்காநகரம்" கெளரவ் இயக்கும் "சிகரம் தொடு" போன்ற படங்களில் நடித்து வருபவர், அடுத்து ஒரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக "180", "எதிர்நீச்சல்" படங்களின் நாயகி ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ஆனந்த் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இதுகுறித்து நடிகை ப்ரியா ஆனந்த் கூறுகையில், துப்பாக்கி படத்திலேயே தாணு அவர்களின் தயாரிப்பில், விஜய்யுடன் நடிக்க வேண்டியது. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. தற்போது, மீண்டும் அவரது தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்

Comments
Post a Comment