நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா!!!

Friday,24th of May 2013
சென்னை::கடந்தாண்டில், அனைவரையும் கவர்ந்த பெண்கள் பட்டியலை,பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், முதல் இடத்தை, தமன்னா பிடித்துள்ளார். இந்த செய்தியை தொடர்ந்து,மார்க்கெட் சரிவினால் சோர்ந்து போயிருந்த தமன்னா, மீண்டும் உற்சாகத்துடன் வலம் வருகிறார்.
 
இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.  தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் பல நடிகைகளும், இந்த பட்டியலில் பின் தங்கியிருப்பது தான், அந்த காரணம். அனுஷ்காவிற்கு மூன்றாவது இடமும், இலியானா, டாப்சிக்கு5 மற்றும் 6 வது இடமும், அமலா பாலுக்கு ஏழாவது இடமும், ஹன்சிகாவிற்கு எட்டாவது இடமும், தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தாவுக்கு ஒன்பதாவது இடமும் கிடைத்துள்ளதாம். இதுபோதாதா, தமன்னா உற்சாகத்துடன் வலம் வருகிறார்.

Comments