ஹன்சிகாவுடன், சிம்பு நடித்து வரும் வாலுவால் சிம்பு டென்ஷன்!!!

Thursday,2nd of May 2013
சென்னை::ஹன்சிகாவுடன், சிம்பு நடித்து வரும், "வாலு படம்,  கிட்டத்தட்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதே,"வாலு என்ற பெயரில், இன்னொரு படத்தின் விளம்பரங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதால், டென்ஷனில் இருக்கிறார் சிம்பு. அந்த இன்னொரு, "வாலு படக்குழுவோ, "சென்னையிலுள்ள பீமண்ணன் பேட்டை பகுதியில் வாழ்ந்த வாலு என்பவரை பற்றிய கதையில், எங்கள் படம் உருவாகியுள்ளது. அதனால், "வாலு டைட்டில் தான் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதில் உறுதியாக உள்ளனர். ஆக, சிம்புவைப் போலவே இவர்களும், "வாலு டைட்டிலை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தெரிகிறது. அதனால், "வாலு யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான், பார்க்க வேண்டும்.

Comments