Friday,24th of May 2013
சென்னை::கவுண்டமணி-செந்தில் காமெடி அலை ஓய்ந்த பிறகு காமெடியில் கலக்கி வந்தவர் வடிவேலு. மற்ற காமெடியன்களை மாதிரி முன்னோடிகளை பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியை பின்பற்றியதால் வேகமாக வளர்ந்தார் வடிவேலு. அவரது காலகட்டத்தில் பல காமெடியன்கள் நடித்து வந்தபோதும் வடிவேலுவே நம்பர்-ஒன் காமெடியனாக திகழ்ந்தார்.
ஆனால், எதிர்பாராத அரசியல் புயலில் சிக்கியதால் 2 ஆண்டு வனவாசம் மேற்கொண்ட வடிவேலு தற்போது கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட அரசு தர்பார் செட்டில் தற்போது தெனாலிராமன் கெட்டப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், வடிவேலுவின் ஆரம்பமே அதிரடியாக இருப்பதால், மார்க்கெட்டில் இருக்கும் சந்தானம் உள்ளிட்ட வளர்ந்து வரும் சில காமெடியன்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. காரணம், அடுத்தபடியாக காமெடியனாக நடிக்கவும் தயாராகி விட்ட வடிவேலு, தனது காமெடி இலாகாவையும் உசுப்பேத்தியுள்ளார். அதனால் மீண்டும் அவர் ரவுண்டு கட்டினால் தங்களது மார்க்கெட் சரிந்துவிடுமே என்ற அச்சத்தில் உள்ளனர்.

Comments
Post a Comment