கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,8th of May 2013
சென்னை::*   சிம்பு ஜோடியாக ‘வாலு படத்தில் நடிக்கும் ஹன்சிகா அண்ணாசாலையில் உள்ள ஷாப்பிங் மாலில் வேலை பார்ப்பவராக நடிக்கிறார். இதற்காக ஒரு ஷாப்பிங் காம்பளக்ஸ் சென்ற ஹன்சிகா அங்குள்ள கடையில் வேலை பார்க்கும் பெண்களின் நடவடிக்கைகளை பார்த்துவிட்டு நடித்தார்.

*   ‘கடல்‘ பட ஹீரோ கவுதம் கார்த்திக் அடுத்து ‘சிப்பாய்‘ என்ற படத்தில் நடிக்கிறார். மதில் மேல் பூனை படத்தில் நடித்த விபா ஜோடி. ‘சிலம்பாட்டம்‘ பட இயக்குனர் சரவணன் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் தொடங்கியது.

*    ‘தலைவா‘ பட பாடல் காட்சி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டது. இந்த நடனத்துக்கான பயிற்சியை காட்சி படமாவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர்தான் விஜய் பெற்றார். ஆனால் ரீடேக் வாங்கவில்லையாம்.

*   தனுஷ் நடித்துள்ள ‘மரியான்‘, ‘ரான்ஜா (இந்தி) படங்களின் டிரைலரை பார்த்த சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷுக்கு பாராட்டு தெரிவித்திருப்பதுடன் குட் லக், காட் பிளஸ் யூ என்று வாழ்த்தி இருக்கிறார்.
 
*   ‘சிறுத்தை‘ சிவா இயக்கும் படத்தில் நடித்துவந்த அஜீத், மீண்டும் விஷ்ணுவர்தன் பட ஷூட்டிங்கிற்கு மாறி இருக்கிறார். ஜெய்சல்மர், லடாக் போன்ற இடங்களில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்றார்.

*   விஜய் நடிக்கும் ‘ஜில்லா‘ படத்தில் அவரது தங்கையாக நடிக்கிறார் 17 வயது மாணவி நிவேதா தாமஸ். நேசன் இயக்குகிறார்.

*    சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த்&ஹன்சிகா நடிக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு‘ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் குஷ்பு.

*    இந்திய சினிமாவின் 100 வருட பயணத்தில் இந்திய சிறந்த நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் சரோஜாதேவி.

*    ‘ஒன்றிரண்டு படம் ஹிட் கொடுத்ததால் மட்டுமே ஹீரோக்களுக்கு ஆக்ஷன் படங்களில் நடிக்க தகுதி வந்துவிடாது. அனுபவம் வாய்ந்த ஹீரோக்கள் நடிக்கும் ஆக்ஷன் படங்களை மட்டுமே ரசிகர்கள் ஏற்பார்கள். இது
பிரசன்னாவின் கருத்து.
 
*    பாலிவுட்டில் 400 படங்களுக்கு மேல் நடித்த பிரானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருந்தது. 93 வயதாகும் பிரான் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த விழாவில் இவரது சார்பில் விருது பெற ஒருவரும் வரவில்லையாம்.

*      ‘நான் பட இயக்குனர் ஜீவா சங்கர், ‘அழகான புதிய காதல் கதைகள் என்ற பெயரில் அடுத்த படம் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

*      ஜெய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வெளிவந்த ‘கோவா‘ படம் கன்னடத்தில் அதே பெயரில் ரீமேக் ஆகிறது. இதன் ஷூட்டிங் தற்போது கோவாவில் நடந்து வருகிறது. கன்னட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை சூர்யா இயக்குகிறார்.

*      எம்ஜிஆர் வேடம் அணிந்து கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் எம்ஜிஆர் சிவா. ‘வாலிபன் சுற்றும் உலகம்‘ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர் பழனியில் நேற்று முன்தினம் இறந்தார்.

*      விக்ரம் நடித்த ‘டேவிட் படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குனர் பிஜோய் நம்பியார் அடுத்து தமிழில் வெளியாகி ஹிட்டான ‘பீட்சா‘ படத்தை இந்தியில் தயாரிக்கிறார். இப்படத்தை வேறு இயக்குனர் இயக்க உள்ளார்.

Comments