மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா!!!

Sunday,19th of May 2013
சென்னை::தமிழில் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை அனன்யா. அதன்பிறகு தமிழில் தனக்கேற்ற படங்களே கிடைக்கவில்லை என்றொரு புகாரை சொல்லிக்கொண்டு மலையாள படங்களில் நடித்தவரை சீடன் படத்துக்காக மீண்டும் கொண்டு வந்தார் திருடா திருடி சுப்பிரமணியசிவா. அதைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும படத்தில் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்த அனன்யா பின்னர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொல்லிவிட்டு சென்றார்.

கேரளாவைச்சேர்ந்த பைனான்சியர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் அனன்யாவுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், அதன்பிறகு ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்று சொல்லி அவர் மீது அனன்யா பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். ஆனால், சில மாதங்களுக்குப்பிறகு மீண்டும் ஆஞ்சநேயனையே திருப்பதியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் அனன்யா.

இந்த நிலையில், பின்னர் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தவர், இப்போது விமல், பிரசன்னா இணைந்து நடிக்கும் புலிவால் படத்தில் நடிக்கிறார். இதே படத்தில் ஓவியா, இனியா போன்ற நடிகைகளும் இருந்தாலும் அனன்யாவின் நடிப்பாற்றலைக் கருத்தில் கொண்டு முக்கிய வேடம் தரப்பட்டுள்ளதாம்

Comments