கோச்சடையான் சிறப்பு காட்சிக்கு கமலை அழைத்தார் ரஜினி!!!

Tuesday,14th of May 2013
சென்னை::ரஜினிகாந்தின் நடிப்பில் மிகப்பெரிய செலவில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். அனிமேஷன் பெருமளவில் இடம்பெறும் படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் கோச்சடையான் படத்தை கமலுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்ட ரஜினி முடிவு செய்துள்ளார். படத்தை பார்த்து கருத்து சொல்லும்படி கமலை அவர் அழைத்துள்ளார்.

கமல் ஏதேனும் திருத்தங்கள் சொன்னால் அதன்படி காட்சிகளை மாற்றவும் முடிவு செய்துள்ளாராம். ரஜினி அழைப்பை ஏற்று விரைவில் கோச்சடையான் படத்தை கமல் பார்க்கிறார்.

Comments