ஹரி இயக்கத்தில் கார்த்தியின் ‘அறுவா’? சந்தானத்துடன் சமாதானம்!!!

Saturday,4th of May 2013
சென்னை::டிகர் கார்த்தி தொடர் வெற்றியின் மூலம் புகழின் ஏணியில் ஏறி அதிக வெற்றிகளை பறித்துவிட திடீர் புயலில் பேலன்ஸ் செய்ய முடியாமல் தொப்பென்று விழுந்துவிட்டார் அவர் கடைசியாக ரிலீசான படங்களின் ஏமாற்றத்தால். அடுத்ததாக கார்த்தி, சந்தானத்துடன் இணைந்து ஹரி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்க கார்த்தி ஒப்புக்கொள்ள சூர்யாவை வைத்து ஹரி இயக்கிய சிங்கம் ஹிட் ஆனதும், விரைவில் ரிலீஸாகவிருக்கும் சிங்கம் 2 படத்தின் மீது ரசிகர்களுக்குள்ள எதிர்பார்ப்பும் தான் காரணமாம். ஆனால் ஹரியின் திரைப்படத்தில் நீண்ட நாட்களாக ஒட்டிக்கொண்டிருக்கும் கார்த்தி-சந்தானம் கூட்டணி உடைக்கப்படும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் இந்த வதந்திகளை உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குனர் ஹரி. 

சமீபத்தில் ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ஹரி “ கார்த்தி-சந்தானத்தின்  கூட்டணியை முறிக்க நான் விரும்பவில்லை. ரசிகர்களுக்கு பிடித்ததையே படமாக எடுக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். சந்தானத்திற்கும், கார்த்திக்கும் இடையே இருந்ததாக கூறப்பட்ட பிரச்சனைகளும் பேசி தீர்க்கப்பட்டுவிட்டதாம்.

மேலும் ” கார்த்தியுடன் நான் இணையவிருக்கும் திரைப்படத்திற்கு இதுவரை பெயர்  வைக்கப்படவில்லை. ‘அறுவா’ என்று பெயர் வைத்திருப்பதாக வரும் செய்திகள் உண்மையல்ல” என்று கூறியிருக்கிறார். ஆனால் ’அறுவா’ என்ற டைட்டில் கார்த்திக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும். அந்த டைட்டில் தான் வேண்டும் என கார்த்தி அடம்பிடிப்பதாகவும் திரையுலகத்தில் பேச்சு அடிபடுகிறது.

Comments