விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம்!!!

 
Friday,24th of May 2013
சென்னை::முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர், பூர்ணா. அப்படத்தின் ஆடியோ விழாவுக்கு வருகை தந்த விஜய், பூர்ணா நடித்த ஒரு பாடல் காட்சியைப் பார்த்து விட்டு, "அடுத்தஅசின் என்று கமென்ட் கொடுத்தார்.அதைக்கேட்டு இன்ப அதிர்ச்சியில் வெடவெடத்துப்போனார் பூர்ணா. அவர் அடுத்த அசின் என்று சொன்னபோதே, அசின் மாதிரி நாமும் விஜயுடன் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று, நினைத்தாரோ என்னவோ தொடர்ந்து முயற்சி எடுத்தார் பூர்ணா. ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. சிறிது கால தெலுங்கு பிரவேசத்துக்குப்  பின், இப்போது தமிழில் சில படங்களில் நடித்து வரும் பூர்ணா, "தற்போது நான் நடித்து வரும், படங்களின் வெற்றி, என்னை விஜயுடன் தானாக ஜோடி சேர வைக்கும் என்று, நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

Comments