சமூக வலைத்தளங்களில் என் ரசிகர்கள், மற்ற ரசிகர்களுடன் மோதிக்கொள்வதை அறிந்து வருத்தப்படுகிறேன்: யுவன் சங்கர் ராஜா!!!
Thursday,2nd of May 2013
சென்னை::கற்றது தமிழ்’ ராம் இயக்கி நடிக்கும் படம், ‘தங்க மீன்கள்’. அப்பா,மகள் உறவைச் சொல்லும் இப்படத்தில் சிறுமி சாதனா மகளாக நடித்துள்ளார். ஒளிப்பதிவு, அர்பிந்து சாரா. இசை, யுவன் சங்கர் ராஜா. பாடல்கள், நா.முத்துக்குமார். இதன் பாடலை பாலு மகேந்திரா வெளியிட்டார். விழாவில் யுவன் சங்கர் ராஜா கூறியதாவது:
சமூக வலைத்தளங்களில் என் ரசிகர்கள், மற்ற ரசிகர்களுடன் மோதிக்கொள்வதை அறிந்து வருத்தப்படுகிறேன்.
எனக்கு யாரிடமும், எந்த ஈகோவும் கிடையாது. வழக்கமான என் வேலையை முழு ஈடுபாடுடன் செய்து வருகிறேன். யாரும் எதையும் கையில் எடுத்துக்கொண்டு செல்வதில்லை. சமூக வலைத்தளங்களை விட, இசைதான் ரசிகர்களையும், என்னையும் இணைக்கிறது என்று நம்புகிறேன். ‘மரியான்’ படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ‘பூ’ ராமு, ராஜீவன், சிவகார்த்திகேயன், ஜே.சதீஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Comments
Post a Comment