கவுதமியுடன் கமல் கொண்டாட்டம்!!!

Wednesday,22nd of May 2013
சென்னை::ஹன்சிகாவுக்கு கவர்னர் பாராட்டு‘தீயா வேலை செய்யணும் குமாரு‘ ஷூட்டிங் ஜப்பானில் நடந்தபோது படப்பிடிப்பு தளத்துக்கு டோயோமா மாநில கவர்னர் நேரில் வந்தாராம். அங்கிருந்த ஹீரோயின் ஹன்சிகாவிடம் பேசிய அவர் ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்‘ என்று ஜப்பான் மொழியில் பாராட்டினாராம். ஹன்சிகாவுக்கு ஜப்பான் மொழி தெரியாது என்பதால் கவர்னர் பேசிய பேச்சை அருகிலிருந்தபடி ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னாராம்.

கோடியை தொட்ட ஓல்டு ஹீரோ

கோலிவுட், டோலிவுட் டாப் ஹீரோக்கள் கோடிகளுக்கு குறையாமல் சம்பளம் வாங்கும் நிலையில் மல்லுவுட்டில் ஓல்டு ஹீரோக்கள் மம்மூட்டி, மோகன்லால் மட்டுமே கோடியை டச் செய்திருந்தார்களாம். அந்த பட்டியலில்
தற்போது மற்றொரு ஓல்டு ஹீரோ சுரேஷ் கோபியும் இணைந்திருக்கிறாராம்.

பாலிவுட்டில் பிஸியாகும் யாமி

‘கவுரவம்‘ படத்தில் அறிமுகமான யாமி கவுதம் ஏற்கனவே இந்தியில் ‘விக்கி டோனர்‘ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சிவம் நாயர் இயக்க ஷர்மான் ஜோஷி நடிக்கும் புதிய இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதுடன் பாகிஸ்தான் நடிகர் அலி ஜாபர் நடிக்கும் ‘அமன் கி ஆஷா‘ என்ற மற்றொரு படத்திலும் நடிக்கிறார்.

கவுதமியுடன் கமல் கொண்டாட்டம்

‘விஸ்வரூபம்‘ 100 நாள் ஓடியதையடுத்து அதை வெற்றி விழாவாக கொண்டாட கமலிடம் யோசனை சொன்னார்களாம். ஆனால் அலுவலகத்திலேயே கவுதமி உள்ளிட்ட ஒரு சிலரை மட்டும் அழைத்து கேக் வெட்டி எளிமையாக விழாவை முடித்துக்கொண்ட கமல் ‘விஸ்வரூபம் 2‘ படத்தை முடிப்பதில் பிஸியாக ஈடுபட்டிருக்கிறாராம்.

Comments