‘தெனாலிராமன்’ படத்திற்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு பாடும் பாடல்!!!

Monday,20th of May 2013
சென்னை::இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் வடிவேலு ஒவ்வொரு படமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
 
அவற்றில் ஒரு படம் ‘தெனாலிராமன்’. யுவராஜ் இயக்கும் இந்த படத்திற்கு இசை டி. இமான். இவரது இசையமைப்பில் சமீபத்தில் இப்படத்திற்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார் வடிவேலு. இத் தகவலை இசையமைப்பாளர் இமானே தெரிவித்துள்ளார்.
 
யுவராஜ்,  கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நடித்த ‘போட்டா போட்டி’ படத்தை இயக்கியவர்.
 
‘தெனாலிராமன்’ படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகும் படம். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ போல மீண்டும் ஒரு முழுமையான நகைச்சுவை அம்சம் கொண்ட வெற்றிப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வடிவேலு பொறுமையாக காத்திருந்தார் என்று கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன..
 
நகைச்சுவை நடிகராக ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த வடிவேலு, நல்ல பாடகராகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஆவார்.

தான் நடிக்கும் படங்களில் வடிவேலு பாடல்களையும் பாடியுள்ளார். அந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன. இளையராஜா இசையில் "எட்டனா...இருந்தா..."  என்ற வடிவேலு பாடிய பாடல் மிகப் பெரிய ஹிட்டான பாடலாகும்.

இந்நிலையில் வடிவேலு போட்டா போட்டி படத்தை இயக்கிய யுவராஜ் இயக்கும் 'கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது.

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் வடிவேலு, இந்த படத்தில் அப்படியே ஒரு பாடலையும் பாடியுள்ளார்
 
எப்படியோ….வடிவேலு…வந்துட்டாருய்யா…வந்துட்டாரு….

Comments