Wednesday,22nd of May 2013
சென்னை::துப்பாக்கியின், மெகா வெற்றிக்கு பின், விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம், தலைவா. "துப்பாக்கி"யை போலவே, "தலைவா"வும், தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என, பெரிதும் நம்பிக்கையுடன் இருக்கிறார், விஜய். அது மட்டுமல்லாமல், இந்த படத்தில், முதல் முறையாக, கோடம்பாக்கம்,"மைனா அமலா பாலுடன் ஜோடி சேர்ந்திருப்பதும், எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தில், விஜய் - அமலா ஆகியோருக்கு இடையே, கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதாம். இந்த படம் வெளியானதும், விஜய் - அசின், விஜய் - த்ரிஷா ஜோடியை போலவே, விஜய் - அமலா பால் ஜோடியும், பெரிய அளவில் பேசப்படும் என்கிறது, படக் குழு.
Comments
Post a Comment