Monday,6th of May 2013
சென்னை::சுந்தர் சி.க்கு உலக சினிமா தெரியுமோ தெரியாதோ. உள்ளூர் வியாபாரம் குறித்த ஞானம் உலகளவு இருக்கிறது. சிம்ப்பிளாக சிக்சர் அடிக்கிறவர் அடுத்து சிம்புவை வைத்து படம் இயக்குவதாக ஒரே பேச்சு. வதந்தி இல்லை உண்மைதான், யு டிவிக்கு அப்படி ஒரு ஆசை இருந்திருக்கிறது.
சிம்புவின் சம்பளம் மற்றும் படத்துக்கான பட்ஜெட் எல்லாம் சேர்த்து 20 கோடியை தாண்டியிருக்கிறது. நானே மினிமம் கியாரண்டி மகாராஜா, என்னை பெரிய பட்ஜெட் பினாமியாக்கப் பார்க்கிறீர்களா என்று உஷாரானவர், எனக்கு விமலே போதும் என்று சிம்புக்கு டேக்கா கொடுத்ததாக கேள்வி.
இந்த திடீர் திருப்பத்தை சிம்புவே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். தீயா வேலை செய்யணும் படத்துக்குப் பிறகு
சுந்தர் சி. அனேகமாக விமலைதான் இயக்குவார் என்கிறார்கள்.
Comments
Post a Comment