கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Monday,20th of May 2013
சென்னை::* ‘கோச்சடையான்’ பட டிரெய்லர், கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிடப்பட்டதுடன் அதில் ரஜினியும் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது. கடைசி நேரத்தில் கேன்ஸ் பட நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டாராம் ரஜினி.
 
* ‘இம்சை அரசன் 23&ம் புலிகேசி’ படத்தை இயக்கிய சிம்புதேவன் & கலைவாணி தம்பதிக்கு சமீபத்தில் மதுரையில் ஆண் குழந்தை பிறந்தது. * முழு மேக்கப்புடன் கிளாமராக நடித்து வந்த பூஜா காந்தி ‘கரிமேடு’ படத்தில் மேக்கப் போடாமல் நடித்துள்ளார். இந்த வேடத்தை ஏற்க வேண்டாம் என தோழிகள் எச்சரித்தும் கேட்காமல் பூஜா ஏற்று நடித்தாராம்.
 
 * ‘துப்பாக்கி’ படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி தொடங்க பேச்சு நடக்கிறது. இதற்கிடையே, அஜீத் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் முருகதாஸ். *
 
விஜய் சேதுபதி நடிக்கும் ‘ரம்மி’ படத்துக்காக ‘பீட்சா’ ஹீரோயின் ரம்யா நம்பீசன் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாட உள்ளார். கர்நாடக இசை கற்றவரான ரம்யா, ஏற்கனவே மலையாள படங்களில் பாடி இருக்கிறார்.
 
* ‘போடா போடி‘ பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் ‘ஒய் திஸ் கொலை வெறி டி‘ இசை அமைப்பாளர் அனிரூத். இப்படத்துக்கு ‘நானும் ரவுடிதான்‘ என பெயரிட உள்ளனர். 
 
* பிரான்சில் நடந்த கேன்ஸ் பட விழாவில் ‘ஈகா‘ (நான் ஈ) படம் திரையிடப்பட்டது. இதையடுத்து ஸ்பெயின் நாட்டில் மேட்ரிட்டில் நடக்கும் திரைப்பட விழா, கொரியாவில் புச்சன் சர்வதேச பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
* ‘கோச்சடையான்‘ படத்தின் டிரைலர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. படத்தை விரைந்து ரிலீஸ் செய்யும் பணியில் மும்முரமாக இருப்பதாக இணைய தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் சவுந்தர்யா.
 
* கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்‘ படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து லிங்குசாமி இயக்கும் படத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பங்கேற்க உள்ளார்.
 
* வழக்கு எண் 18/9’ படத்தையடுத்து புதிய படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாரித்திருக்கும் இயக்குனர் பாலாஜி சக்திவேல், அதன் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.
 
* ‘எதிர்நீச்சல்’ படம் மூலம் தயாரிப்பாளர் ஆன தனுஷ், அடுத்து ஆடியோ வெளியீடு நிறுவனம் தொடங்க உள்ளார்.
 
 * ‘யான்’ படத்தின் பாடல் கம்போசிங்குக்காக இயக்குனர் ரவி கே.சந்திரன், ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு சென்றனர்.
 
* ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சிங்கம் 2’, ஜூன் 14&ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதேநாளில் தெலுங்கிலும் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 
* பிரான்சில் நடந்த கேன்ஸ் பட விழாவில் அமிதாப் கெஸ்ட் ரோலில் நடித்த ‘கிரேட் கேட் ஸ்பை’ படம் திரையிடப்பட்டது. இதில் நடித்த ஹாலிவுட் நடிகர்களுடன் அமிதாப்பும் கலந்துகொண்டார்.

Comments