தங்க மீன்கள் படத்தில் பத்மபிரியா!!!

Friday,3rd of May 2013
சென்னை::வாய்ப்புகள் இல்லாமல் போக, அமெரிக்காவுக்கு படிக்கச் செல்கிறேன் என்று கூறிய பத்மபிரியா, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் தயாரிப்பில், ராம் இயக்கியிருக்கும் 'தங்க மீன்கள்' படத்தில் முக்கிய

'கற்றது தமிழ்' படத்திற்குப் பிறகு ராம் இயக்கும் 'தங்க மீன்கள்' படம் அப்பா, மகளுக்கு இடையே உள்ள பாசப் போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமாகும். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. பாடல்களும், அதை படமாக்கிய் விதமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் இயக்குநர் ராமே கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். சாதனா, ஷெல்லி கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்மபிரியா முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பரதேசி உள்ளிட்ட பல படங்களை வினியோகம் செய்த ஜே.எஸ்.கே கார்ப்பரேஷன் ஜே.எஸ்.சதீஷ்குமார் இப்படத்தை வெளியிடுகிறார்.
கதாபாத்திரம் ஒன்றில் பத்மபிரியா நடித்துள்ளார்.

Comments