'தீயா வேலை செய்யணும் குமார்' படத்துக்கு 'யு' சான்றிதழ்!!!

Thursday,23rd of May 2013
சென்னை::சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் படம் 'தீயா வேலை செய்யணும் குமாரு'. நகைச்சுவை காதல் படமாக உருவாகும் இப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது.

சுந்தர்.சி இயக்கத்தில், யுடிவி தயாரித்த 'கலகலப்பு' படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து இதே கூட்டணி தற்போது தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். சுந்தர்.சி படம் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது, கூடவே கவர்ச்சிக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால், தீயா வேலை செய்யணும் படத்தில் மட்டும் கவர்ச்சிக்குப் பதில் காதலை கொஞ்சம் தூக்கலாக பயன்படுதியிருக்கிறார்கள்.

காமெடி பிளஸ் காதல் என்று இப்படத்தில் சுந்தர்.சி, தன்னை மாறுபட்ட பரிணாமத்தில் காட்டியிருக்கிறார். எங்கேயும் எப்போதும் படத்திற்கு இசையமைத்த சத்யா தான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் வெளியாகி ரசிகர்களை முனுமுனுக்க வைக்த்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் படத்தை வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடுவதற்கான  வேலைகளும் பரபரப்பா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதற்கு முன்பு, இப்படத்தை சமீபத்தில் தணிக்கை குழு அதிகாரிகளுக்கு போட்டி காண்பித்துள்ளனர். படத்தைப் பார்த்த அதிகாரிகள் விழுந்து விழுந்து சிரித்ததுடன் படத்திற்கு எந்தவித கட்டும் சொல்லாமல் அனைத்து தரப்பினர் மற்றும் குடும்பத்தோடு பார்க்க கூடிய 'யு' சான்றிதழை வழங்கியுள்ளார்கள்.

Comments