Wednesday,29th of May 2013
சென்னை::கடனை திருப்பி செலுத்தாததால் நடிகர் கரண் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜயா வங்கி அறிவித்து உள்ளது.
கரண் தீ நகர், கருப்பசாமி குத்தகைதாரர், மலையன், கந்தா, தம்பி வெட்டோத்தி, சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது கன்னியும் காளையும் செம காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திருவல்லிக்கேணியில் உள்ள விஜயா வங்கியில் கரண் கடன் வாங்கி விட்டு அதனை திருப்பி செலுத்தவில்லை என்று வங்கி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
கடன் வாங்கிய கரண் மீதும் ஜாமீன் கொடுத்த மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்போவதாக நோட்டீஸ் வெளியிடப்பட்டு உள்ளது. கரண் எவ்வளவு கடன் வாங்கி இருந்தார் என்ற விவரம் தெரியவில்லை

Comments
Post a Comment