கோலிவுட், டோலிவுட்டை அடுத்து ஹீரோயின்கள் பாலிவுட்டுக்குதான் குறி வைப்பது வழக்கம்,போஜ்புரிக்கு போகிறார் சினேகா!!!

Friday,3rd of May 2013
சென்னை::போஜ்புரி மொழி படத்தில் நடிக்கிறார் சினேகா.கோலிவுட், டோலிவுட்டை அடுத்து ஹீரோயின்கள் பாலிவுட்டுக்குதான் குறி வைப்பது வழக்கம். கவர்ச்சி போட்டிக்கு தயாராக இருந்தால்தான் இது சாத்தியமாகும். சினேகாவை பொருத்தவரை கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் குடும்ப பாங்காக, அடக்க ஒடுக்கமாக நடித்து அதற்கான இமேஜை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இவரை தேடி போஜ்புரி பட வாய்ப்பு வந்தது. பிரசன்னாவை மணந்த பிறகு அவர் நடித்து திரைக்கு வந்தபடம் ‘ஹரிதாஸ்’. பள்ளி ஆசிரியையாக இதில் நடித்திருந்தார். ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது அன்பு செலுத்தும் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். இப்படம் போஜ்புரி மொழியில் ரீமேக் ஆகிறது. ஜூடோ ராமு இயக்குகிறார். இவர் ஏற்கனவே போஜ்புரியில் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ உள்பட 7 படங்கள் இயக்கி இருக்கிறார்.

சினேகா தவிர இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்களில் போஜ்புரி நடிகர், நடிகைகளையே நடிக்க வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார்.

Comments