Monday,27th of May 2013
சென்னை::அஜீத் நடித்த மங்காத்தா படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. அதனால் அதையடுத்து அவர் படத்தில் நடிக்க விரும்பிய கார்த்தி, அவரிடம் சில கதைகளைக்கேட்டு அதில் ஒன்றை நடிக்க சம்மதித்தவர், அதை தனது உறவுக்காரரான ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவையே தயாரிக்கவும் சொன்னார். இப்படி முடிவாகி பின்னர் படப்பிடிப்பையும் தொடங்கினார்கள். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே படப்பிடிப்பை ஆமை வேகத்தில் நகர்த்தினாராம் வெங்கட்பிரபு. அதாவது ஒரு வாரத்தில் படமாக்க லொகேஷன் பிடித்தால், அதில் 10 நாட்களுக்கு மேலாகவும் படப்பிடிப்பை நடத்தினாராம்.
இதனால் பல சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் வேறு தயாரிப்பாளர் என்றாலும் பிரச்சினையில்லை. ஆனால் படத்தை தயாரிப்பது தனது உறவுக்காரராச்சே. போட்ட பட்ஜெட்டுக்கு மேல் எகிறி விட்டால் பிரச்சினையாகி விடுமே என்று ஸ்பாட்டிலேயே தனது கோபத்தை காட்டியிருக்கிறார் கார்த்தி. ஆனாலும், அதற்கெல்லாம் அசரவில்லையாம் வெங்கட்பிரபு. தொடர்ந்து தனது வழக்கமான ஸ்பீடிலேயே படப்பிடிப்பை கொண்டு சென்றிருக்கிறார்.
ஆனால், இந்த பிரச்சினையை மேலும் பெருசாக்கினால், படத்துக்குதான் பங்கம் ஏற்படும் என்று அமைதியாகி விட்டதாம் கார்த்தி வட்டாரம். ஆக, தனது விருப்பப்படியே படத்தை முடித்திருக்கிறார் வெங்கட்பிரபு. இந்த தகவல் இப்போது அப்படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் மூலம் வெளியில் கசியத் தொடங்கியுள்ளது.

Comments
Post a Comment