தலைவா விநியோக உரிமையை கைப்பற்றியது வேந்தர் மூவிஸ்!!!

Tuesday,21st of May 2013
சென்னை::விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் தலைவா படத்தின் விநியோக உரிமையை வேந்தர் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
துப்பாக்கி வெற்றியைத் தொடர்ந்து விஜய் - ஏ.எல்.விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தலைவா. படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இந்தப் படத்தின் விநியோக உரிமையை பெருந்தொகை கொடுத்து வேந்தர் மூவிஸ் பெற்றுள்ளது.
 
காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி என விஜய் நடித்த படங்கள் தொடர் வெற்றிப் படங்களாக அமைந்ததால் தலைவா படத்துக்கு கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டிக்கு நடுவில் வாங்கி இருக்கிறது வேந்தர் மூவிஸ்.
 
இதன் கேரள விநியோக உரிமையை துப்பாக்கி படத்தை வெளியிட்ட தமீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் கர்நாடக ஏரியாவுக்கான உரிமையை வாங்குவதற்கு கே மஞ்சு ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் கூறுகின்றன. இவர் ஏற்கனவே சில விஜய் படங்களை வெளியிட்டிருக்கிறார்.
 
இதனிடையே படத்தின் ஆடியோவை விஜய் பிறந்த நாளான அதாவது ஜூன் 22ம் தேதி வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தலைவா படம் விஜய் பிறந்த நாளுக்கு கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments