Wednesday,15th of May 2013
சென்னை::ஹாலிவுட் படங்களில் நம்மூர் ஸ்டார் நடிகர்களை ஊறுகாய் அளவுக்குதான் பயன்படுத்துவார்கள். மிஷன் இம்பாஸிபிள் கோஸ்ட் புரோட்டோகால் படத்தில் அனில்கபூரை ஊறுகாய் அளவுக்குக்கூட பயன்படுத்தவில்லை.
தற்போது வெளியாகியிருக்கும் ஹாலிவுட் படமான த கிரேட் கேட்ஸ்பை படத்தில் அமிதாப்பச்சனும் நடித்திருக்கிறார். இதிலும் ஊறுகாய்தான். அமிதாப்புக்கு இது தேவையா என்பது பலரின் கேள்வி. அமிதாப் அதற்கு விளக்கம் தந்திருக்கிறார்.
த கிரேட் கேட்ஸ்பை படத்தை என்னுடைய முதல் ஹாலிவுட் படமாக யாரும் கருத வேண்டாம். அதில் நான் செய்திருப்பது ஒரு கெஸ்ட் ரோல்தான் என்றிருக்கிறார்.
அப்படத்தின் இயக்குனர் Baz Luhrmann இந்தியாவுக்கு டூர் வந்த போது அமிதாப்பை சந்திக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். அமிதாப்புக்கு ஆச்சரியம். அவருக்கு தன்னை எப்படி தெரியும் என்று. இருவரும் சந்தித்திருக்கிறார்கள்.
Comments
Post a Comment