தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் மேலும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம்!!!

Saturday,4th of May 2013
சென்னை::தமிழ் சினிமாவில் இதுவரை பல கார்ப்பரேஷ் நிறுவனங்கள் அடியெடுத்து வைத்து, அடியோடு அடங்கிப் போனதுதான் மிச்சம். தற்போது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மட்டும் பல தோல்விப் படங்களையும், ஒரே ஒரு வெற்றிப் படத்தையும் தயாரித்து கோடம்பாக்கத்தில் உலா வருகிறது.

இந்த நிலையில், மேலும் ஒரு புதிய கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றி கோடம்பாக்கத்தில் டேரா போட்டு, இங்குள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளதாம். ஃபுல் ஹவுஸ் எண்டெர்டெயின்மெண்ட் (Full Houwe Entertainment) என்ற அந்த நிறுவனம் தனது முதல் படமாக 'மனதில் மாயம் செய்தாய்' என்ற படத்தை தயாரிக்கிறது.

'மைனா' படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த சேது, இப்படத்தின் பிரதான நாயகனாக நடிக்கிறார். மற்றொரு புதுமுகம் ஒருவரும் நடிக்கும் இப்படத்தை சுரேஷ் குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 6ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்குகிறது.
 
மனதில் மாயம் செய்தாய்
 
சமீப காலமாக தமிழ் திரை உலகில் வேடிக்கையான , எல்லோரையும் கவர கூடிய தலைப்பு வைப்பது என்பது ஒரு படம் எடுப்பதை விட சவாலானது .சிவா மனசுல சக்தி என்ற படம் S M S என்ற பெயரில் சில வருடங்களுக்கு முன்னர் வெளி வந்தது . அதை தொடர்ந்து இப்போது ‘ மனதில் மாயம் செய்தாய் ‘ என்ற படம் M M S என்ற பெயரில் தயாராகி வருகிறது .சுரேஷ் குமார் இயக்கத்தில் full house entertainment என்ற பன்னாட்டு நிறுவனம் நிறைய தரமான படங்களை தயாரித்து அதன் மூலம் நிறைய இயக்குனர்களையும் நடிகர்களையும் அறிமுகபடுத்த வேண்டும் என்ற முனைப்பில் தமிழ் திரை உலகில் தடம் பதிக்க வருகிறது .காதலின் மகத்துவத்தை மற்றுமொரு பாணியில் சொல்லும் மனதில் மாயம் செய்தாய் படத்தில் பிரதான நாயகனாக நடிக்க உள்ளார் மைனா படம் புகழ் ‘ சேது ‘. வரும் 6ஆம் தேதி கோலாகலமான பூஜையுடன் துவங்க இருக்கும் மனதில் மாயம் செய்தாய் படத்தின் அழைப்பிதழ் படத்தின் தரத்தை உறுதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளது எதிர்பார்த்ததே !!!

Comments