Monday,27th of May 2013
சென்னை::‘வாலு', ‘வேட்டை மன்னன்‘ ஆகிய படங்களில் நடிக்க மாட்டேன் என்று சிம்பு அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாகவே ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் கொண்டிருக்கிறார் சிம்பு. சமீபத்தில் தியானம் செய்யப்போவதாக இமயமலை புறப்பட்டு சென்றார். இதற்கிடையில் 2 படங்களில் நடிக்க முடியாது என்று அறிவித்து ஷாக் கொடுத்திருக்கிறார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் அவர், ‘சினிமா ஷூட்டிங்கிலிருந்து சற்று ஓய்வு எடுத்துகொள்ள உள்ளேன். பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவுக்கு வரவில்லை.
பணம், புகழ், ரசிகர்கள் என மூன்றையுமே எனக்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறான். இன்னொரு விஷயத்தை சொல்வதற்காக வருந்துகிறேன். வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடிக்காமல் ஒதுங்க உள்ளேன். இதற்கு காரணம் தயாரிப்பு நிறுவனத்துடன் எனக்கு ஏற்பட்ட பிரச்னைதான் என்றார். 2 படங்களிலும் நடிக்க மாட்டேன் என முதலில் சிம்பு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின் தயாரிப்பாளர் மற்றும் நண்பர்கள் பேசி நடிப்பதற்கு சம்மதம் பெற்றுள்ளனர். தொடர்ந்து சிம்பு கூறுகையில், தயாரிப்பாளர் என்னிடம் பேசி பிரச்னைக்கு தீர்வு கண்டார். எனவே ஷூட்டிங்கில் பங்கேற்பேன். ஆன்மிகம் என்னை பெருமளவுக்கு மாற்றி இருக்கிறது என்றார்.

Comments
Post a Comment