ஆன்மீகத்தில் தீவிரம்: நடிகர் சிம்பு இமயமலை பயணம்!!!

Wednesday,22nd of May 2013
சென்னை::நடிகர் சிம்பு ஆன்மீகத்தில் தீவிரமாகியுள்ளார். ஏற்கனவே தியான பயற்சிகள் மேற்கொண்டு வந்தார். பழைய மாதிரி இல்லாமல் எப்போதும் தனிமையிலும் மவுனமாகவும் இருந்து வந்தார். தற்போது திடீரென இமயமலை புறப்பட்டுச் சென்று உள்ளார்.
 
ரஜினி அடிக்கடி இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்வது உண்டு. அவர் வழியில் சிம்புவும் இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்கிறார். அங்கு புனித ஸ்தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு சென்று சிம்பு வழிபடுகிறார்.
 
இது அவரது முதல் இமயமலை பயணம் ஆகும். நேற்று கேதார்நாத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

Comments