Monday,27th of May 2013
சென்னை::தமிழ், தெலுங்கு நடிகைகளுக்கு தெலுங்கு படவுலகில் மவுசு அதிகம். இதில் த்ரிஷா - இலியானாவுக்கு கூடுதல் மவுசு உண்டு. தெலுங்கில் நடிக்க இலியானாவுக்கு ஒன்றரை கோடி வரை சம்பளம் தரப்பட்டு வந்தது. இதில் சற்று பின் தங்கி இருந்த த்ரிஷா, தற்போது இலியானாவை முந்திக் கொண்டிருக்கிறார். அவரை விட ரூ.10 லட்சம் அதாவது ரூ.1 கோடியே 60 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறாராம் த்ரிஷா.
கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த த்ரிஷா, சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறாராம். இதனால்தான் அவருக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது.
ரம்' என்ற பெயரில் உருவாகும் படத்துக்காகத்தான் த்ரிஷா ரூ.1 கோடியே 60 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. த்ரிஷாவுக்கு இருக்கும் பேர், புகழுக்காகவும் உயர்ந்து வரும் அவரது இமேஜூக்காகவும் இந்த சம்பளம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
Comments
Post a Comment