ஒரே படத்தில் அப்பா, மகனுக்கு ஜோடியாகிறார் ஸ்ரேயா!!!

Wednesday,22nd of May 2013
சென்னை::கோலிவுட்டில் ரஜினி, விஜய் என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வந்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று மார்க்கெட் வீழ்ந்தது. எதிர்பார்த்த வேடங்கள் வராததால் காத்திருந்தவர் தமிழ், கன்னடத்தில் உருவாகும் ‘சந்திரா’ என்ற படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ‘பவித்ரா‘ என்ற படத்திலும் நடிக்கிறார். மீண்டும் ஸ்ரேயாவுக்கு அதிர்ஷ்ட காற்று வீச தொடங்கி இருக்கிறது. ‘யாவரும் நலம்’ பட இயக்குனர் விக்ரம்குமாரின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இப்படத்தில் டோலிவுட் ஹீரோ நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யாவுடன் ஸ்ரேயா நடிக்க உள்ளார்.
 
இதுபற்றி ஸ்ரேயா கூறும்போது,‘இப்போது இப்படம் பற்றி விரிவாக சொல்ல முடியாது. இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இயக்குனர் விக்ரம்தான் கதை பற்றி கூறுவதற்கு பொருத்தமானவர். சந்திரா, பவித்ரா பட ஷூட்டிங் முடிந்தது. புதிதாக சில தமிழ் படங்களின் கதைகளும் கேட்டு வருகிறேன் என்றார். விக்ரம்குமார் படத்தில் நாகார்ஜுனா, நாக சைதன்யா என இருவருக்கும் ஜோடியாக ஸ்ரேயா நடிப்பதாக கூறப்படுகிறது.

Comments