Thursday,2nd of May 2013
சென்னை::குளோபல் இன்போடெய்ன்மென்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படம், ‘பட்டத்து யானை’. பூபதி பாண்டியன் இயக்குகிறார். விஷால் ஹீரோ. அவர் ஜோடியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். கோவளம் கடற்கரையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு ஐஸ்வர்யா நிருபர்களிடம் கூறியதாவது:
வெயில் தெரியாமல் வளர்ந்தேன். அப்படி நான் வளர, என் அப்பா எத்தனை வெயிலில் கஷ்டப்பட்டு நடித்திருப்பார் என்பதை உணர்கிறேன். 100 டிகிரி வெயிலில் நடித்தாலும் சிறப்பாக நடித்து அப்பாவை திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருப்பதால் கஷ்டம் தெரியவில்லை.
ஒரு நாள் படப்பிடிப்புக்கு வந்து அப்பா பார்த்தார். சிறப்பாக நடிப்பதாகப் பாராட்டினார். படத்தில் பிளஸ்,2 படிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். வாழ்க்கையை ஜாலியாக எடுத்துக் கொள்ளும் பெண். நிஜத்திலும் என் கேரக்டர் அப்படித்தான் என்பதால் எளிதாக நடிக்க முடிகிறது. பாடல் காட்சியில் மட்டும் கிளா மர் இருக்கும். நிறைய வாய்ப்புகள் வருகிறது. ‘பட்டத்து யானை’ வெளிவந்த பிறகு மற்ற படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். இவ்வாறு
ஐஸ்வர்யா கூறினார். ஒரு நாள் படப்பிடிப்புக்கு வந்து அப்பா பார்த்தார். சிறப்பாக நடிப்பதாகப் பாராட்டினார். படத்தில் பிளஸ்,2 படிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். வாழ்க்கையை ஜாலியாக எடுத்துக் கொள்ளும் பெண். நிஜத்திலும் என் கேரக்டர் அப்படித்தான் என்பதால் எளிதாக நடிக்க முடிகிறது. பாடல் காட்சியில் மட்டும் கிளா மர் இருக்கும். நிறைய வாய்ப்புகள் வருகிறது. ‘பட்டத்து யானை’ வெளிவந்த பிறகு மற்ற படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். இவ்வாறு
Comments
Post a Comment