விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல்!!!

Sunday,19th of May 2013
சென்னை::வெளுத்துக்கட்டு படத்துக்காக தமிழுக்கு வந்தவர் அருந்ததி. கன்னட படங்களில் நடித்துக்கொண்டிருந்த தெலுங்கு நடிகையான இவர், எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் நடித்ததால், அதையடுத்து தமிழில் தனக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்ற கனவோடு வந்தாராம். அதோடு, எஸ்.ஏ.சி மூலமாக விஜய்யுடனும் டூயட் பாடி விட வேண்டும் என்றெல்லாம்கூட பெரிய கனவே வளர்த்து வைத்திருந்தாராம். ஆனால், நடித்த படங்கள் எதுவுமே ஓடாததால் அருந்ததியின் மார்க்கெட் சறுக்கி விட்டதோடு, அவரது விஜய் கனவும் கலைந்து போய் விட்டதாம்.

இப்படி சொல்லி புலம்பும் அவர், இந்த நேரம்பார்த்து, நேற்று இன்று என்ற படத்தில் என்னை தோலுரித்து விட்டார்கள். அப்படத்தில் வெளியான ட்ரெய்லரைப்பார்த்து விட்டு, அனைவரும் என்னை ஆபாச நடிகை என்றே முடிவு செய்து விட்டனர். ஆனால், சொல்லப்போனால் நான் ஏமாந்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். என்னிடம் கதை ஒரு மாதிரியாக சொல்லிவிட்டு, படமாக்கும்போது வேறு கோணத்தில் படமாக்கி, என்னையும் தண்ணீரில் குளிக்க விட்டதோடு, ஆபாச ஆட்டம் போட வைத்து விட்டனர்.

இதனால் எனது இமேஜ் வேறு மாதிரியாகி விட்டது. ஆனால் இந்த நிலையிலும், நான் நடித்துள்ள சரவணப்பொய்கை, வெற்றி ஆகிய படங்களில் எனக்கு ஹோம்லியான வேடம். அதனால் அந்த படங்கள் இருக்கிற ஆறுதல்தான் என்னை தொடர்ந்து சென்னையில் இருக்க வைத்திருக்கிறது. இல்லையேல் எப்போதோ ஆந்திராவுக்கு பறந்து போயிருப்பேன் என்கிறார் அருந்ததி.

Comments