தமிழில் ‘சேவல்’, ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்‘, ‘துரோகி’ படங்களில் நடித்த பூனம் பஜ்வா மாடலாக நடிக்கிறார்!!!
Saturday,4th of May 2013
சென்னை::தமிழில் ‘சேவல்’, ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்‘, ‘துரோகி’ படங்களில் நடித்தவர் பூனம் பஜ்வா. தற்போது தெலுங்கு படத்தில் நடித்துவரும் அவர் கூறியதாவது: தமிழில் நடித்து நீண்ட நாட்களாகிவிட்டது. தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துவருகிறேன். ஒரே மாதிரியான கேரக்டர்களாக வந்ததால் தமிழில் நடிக்கவில்லை. சிறந்த, சவாலான பாத்திரங்கள் கிடைத்தால் எப்போதும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
இப்போது பெண்களுக்கு முக்கியத்துவமுள்ள கதை ஒன்றில் நடிக்க இருக்கிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் த்ரிஷா, ரம்யா நம்பீசனும் நடிக்கிறார்கள். ‘ப்ரியம்’ பாண்டியன் இயக்குகிறார். நான் மாடலாக நடிக்கிறேன். இதுவரை இப்படியொரு கேரக்டரில் நடிக்கவில்லை என்ற அளவில் இது இருக்கும். நடிப்புத் திறமைக்கு சவாலாகவும் இருக்கும். இவ்வாறு பூனம் பஜ்வா கூறினார்.
Comments
Post a Comment